உணவு நெருக்கடியை தவிர்க்கும் முகமாக நெல் மூடைகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு உணவு நெருக்கடியைக் குறைக்கும் முகமாக நெல் மூடைகள் புதன்கிழமை(07) களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
ஓந்தாச்சிமடம் வடக்கு, ஓந்தாச்சிமடம் தெற்கு, களுதாவளை மத்தி, களுதாவளை 02, களுதாவளை 03, களுதாவளை 04, தேற்றாத்தீவு தெற்கு, பெரியகல்லாறு 02, பெரியகல்லாறு மேற்கு, ஆகிய மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டிலே நெல்மூடைகள் வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் வழிகாட்டலில், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி காமினி யூட் இன்பராசா அவர்களின் ஒருங்கிணைப்பில வட்டி அற்ற இலகு கடன் அடிப்படையில் 173 நெல் மூடைகள் பயனாளிகளுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நெல் மூடைகளை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment