19 Dec 2022

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்கும்  விழிப்புணர்வு நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் கொக்கட்டிச்சேலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 17.12.2022 சனிக்கிழமை (பிற்பகல்) இடம் பெற்றது.

சர்வமத செயற்குழுவின் மாவட்ட இணைப்பாளர் இரா.மனோகரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது சர்வமத செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் போதைப் பொருட்பாவனையை தடுக்கும் வகையில் பாதாதைகளை ஏந்தியும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இன்றைய காலத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பாவனையும் நிறுத்தவும், போதைப் பொருள் பாவனையை தூண்டும் வகையில் செயற்படும் சில தீய சக்திகளை இனங்கண்டு சட்டத்தின் முன்நிறுத்தி எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுகத்தை உருவாக்கும் நோக்குடன் இவ்விழிப்புனர்வு நிகழ்வு இடம் பெறுவதாக இணைப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதி தவிசாளர், கொக்கட்டிச்சேலை பொலிஸார், பிரதேச சபை உறுப்பினர்கள் மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வு  பட்டிப்பளை சந்தியிலிருந்து ஆரம்பமாகி கொக்கட்டிச்சேலை சிவன் ஆலய சந்திவரை சென்று இவ்விழிப்பூட்டல் நிகழ்வு நிறைவடைந்தது.







SHARE

Author: verified_user

0 Comments: