மண்முனை மேற்கு, பிரதேச சமுர்த்தி வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுர்த்தி வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் வியாழக்கிழமை (22) மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் உதவி பிரதேச
செயலாளர் சுபா சதாகரன், பிரதேச செயலக கணக்காளர் சுந்தரலிங்கம், மாவட்ட சமுர்த்தி
அலுவலக கணக்காளர் பஸீர் , மாவட்ட சமுர்த்தி அலுவலக தலைமையக முகாமையாளர் மனோகிதராஜ்
மற்றும் மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேச செயலக சமூர்த்தி
முகாமையாளர்கள், கணக்காய்வாளர்கள் உட்பட களத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
பிரதேச
செயலக தலைமை அலுவலகம், வங்கிச் சங்கம், சமுர்த்தி வங்கி மற்றும் 24 கிராமப் பிரிவுகளின்
முன்னேற்றம் இங்கு ஆராயப்பட்டது.
இதன்போது
பிரதேச செயலகப் பிரிவில் இவ் வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூர்த்தி வேலைத்தட்டங்கள்
வங்கி முன்னேற்றங்கள், தொடர்பாக களத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் முன்னேற்றங்கள் தொடார்பாக ஆராயப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக
உதவி பிரதேச செயலாளர் மற்றும் சமுர்த்தி பணிபபாளரால் ஆலோசனை வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment