8 Dec 2022

குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடம்.

SHARE

(சோபிதன்)

குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடம்.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் செவ்வாய்கிழமை(06) இரவு நடைபெற்ற மின்னொளி  கரப்பாந்தாட்ட சமரில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடத்தை பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.

15 அணிகள் பங்கு பற்றியிருந்த இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகமும், மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு கழகமும் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடத்தையும், எவர் சைன் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதன்போது போட்டியின் சிறப்பான ( Passer) க்கான ஆட்ட நாயகநாக ஏசியன் விளையாட்டு கழகத்தின் பிரபாத்தும், சிறப்பான ஆட்ட நாயகனாக குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின்  தசுனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இப்போட்டி இறுதி நிகழ்வில் குருக்கள்மடம் இராணுவ முகாம் நிலையப் பொறுப்பதிகாரி விளையாட்டு உத்தியோகத்தர், மதகுரு, பொதுமக்கள் என  பலர் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: