11 Dec 2022

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு.

SHARE

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 10.12.2022 அன்று பி. 2.30 மணியளவில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.சு.கதிர்காமத்தம்பி அரங்கில் நடைபெற்றது.

இதில் நிருவாக சபை உறுப்பினர்கள் அடங்கலாக பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெற்றது. தலைவராக எல்.தேவஅதிரன் அவர்களும், செயலாளராக .சக்திவேல் அவர்களும், பொருளாராக எஸ்.வரதராஜன் அவர்களும், உபதலைவராக ரி.எல்.ஜௌபர்கான் அவர்களும், உபசெயலாளராக எம்..சி.எம்.ஜெலீஸ் அவர்களும், கணக்காய்வாளராக எஸ்.தவபாலரெட்ணம் அவர்களும், தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து நிருவாக சபை உறுப்பினர்களாக சு.துஷியந்தன், சு.கமலேஸ்வரன், .ஜெகதீஸ்வரன், ஜே.எவ்.காமிலாபேகம், வி.பத்மசிறி, எம்.எச்.எம்.அன்வர், எம்.துதிகரன், .துசாந்தன், எஸ்.மயூரப்பிரியன், எல்.சஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.சதீஸ்குமார், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது தலைமை உரையாற்றிய அமைப்பின் தலைவர் எல்.தேவஅதிரன கருத்து தெரிவிக்கையில்  நாம் நமது அமைப்பினால் அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றோம். இவ்வருடம், சிவராம் ஞாபகார்த்த மன்றத்துடன் இணைந்து, சிவராம் ஞாபகார்த்த புத்தகம் வெளியிடப்பட்டிருந்தோம். அதுபோல் கடந்த காலத்தில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து ஊடகவியலாளர்களின் மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்கில் ஆங்கில வகுப்பை நடாத்தியிருந்தோம். அதுபோல் சி.பி. அமைப்புடன் இணைந்து, மனித உரிமை தொடர்பான நிகழ்வுகளையும், சமூக ஊடகம், டியிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளையும், வழங்கியிருந்தோம். தொழில்சார் ஊடகவியாலளர் சங்கத்துடன் இணைந்தும் நாம் பல்வேறு வேலைத்திட்டங்களையும், மேற்கொண்டிருந்தோம். தொடர்ந்து இவ்வாறான இன்னும் பல நிகழ்வுகளையும், ஊடகவியலாளர்களுக்குரிய நலநோம்புத் திட்டங்களையும். மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு சகஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பும், பங்கழிப்பும் தொடர்ந்தும் மிக மிக இன்றியமையாததாகும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உபதலைவராக ரி.எல்.ஜௌபர்கான் இந்த அமைப்பின் வளற்சிக்கு நாம் கடந்த காலங்களில் பக்கபலமாக செயற்பட்டோம். இவ்வமைப்பை தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நடாத்துவதொன்பது மிகவும், சாலச்சிறந்ததாகும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்பது போல் நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், செயற்பட வேண்டும். மேலும் இந்த அமைப்பை எதிர்காலத்திலும், முன்கொண்டு செல்வதற்கு எம்மாலான அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என தெவித்தார்.














SHARE

Author: verified_user

0 Comments: