குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்திற்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் புத்தகங்களைக் கையேற்கும் நிகழ்வு சனிக்கிழமை(24) மாலை வாசகர் வட்ட தலைவர் சி.விவேகானந்தம்; தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் அறிவழகன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சனசமூக உத்தியோகத்தர் குகநேசன் மற்றும் ஆலய நிருவாக பிரதிநிதிகள், வாசகர்கள், சங்கங்கள் கழகங்களின் தலைவர்கள் கிராமபொது மக்கள் என பலரும் பங்குபற்றினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 50000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களை இதன்போது வாசகர் வட்டத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.
0 Comments:
Post a Comment