24 Dec 2022

புலம் பெயர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்.

SHARE

புலம் பெயர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்.

சர்வதேச புலம் பெயர் தினத்தை முன்னிட்டு புலம் பெயர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று வியாழக்கிழமை(22) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவகத்தினால் மட்டக்களப்பு சத்திருக்கொண்டானில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், இதன்போது கலந்து கொண்டிருந்தனர். நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன், மற்றும் சிரேஸ்ட்ட வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஜெயசாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களையும். விளக்கங்களையும் வழங்கினர்.

ஊதியத் திருட்டு ஒரு குற்றமாகும். அதன் விளைவுகளைப் புறக்கணித்தல் அதைவிட பாரதுரமான குற்றமாகும், உலக ஊழிய சந்தையில் குறிப்பாக குறைந்த தேர்ச்சி மற்றும் குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஊதிய திருட்டு அதிகரித்து வருகின்றது.

சாதகமாக பயன்படுத்திக் கொண்டதால் நிமை மிகவும் மோசமடைந்தது. புலம்பெயர் ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பப்பட்ட போதும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட அவர்களுக்கு எந்தவிதமான கருணை கொடுப்பனவோ அல்லது இழப்பீடோ வழங்கப்படவில்லை.  புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்தை மறுப்பதானது உரிமை மீறலாகும். இது உழைப்பை நவீன அடிமைத்தனத்திற்கு விற்பதற்கு சமமானதாகும். தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் அமைதியின்மை காரணமாக சிறந்ததொரு வாழ்க்கைக்கான சிறந்ததொரு இடத்தை நாடி மக்கள் வெளியேறுகின்றனர். புலம்பெயர் ஊழியர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக உழைப்பின் கண்ணியம் சம்பந்தப்பட்ட அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்தை மறுத்தலானது ஒழுங்கற்ற மற்றும் முறைசார யுலம்பெயர்வுக்கு வழி வகுக்கும்.

குறைந்தபட்ச வாழ்கை ஊதியத்தை ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் மீண்டும். நிலைநிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கோருகின்றோம். மனித விற்பனையில் ஈடுபடுபவர்கள் புலம்பெயர்வு சொல்லாடலில் ஒரு இழுக்காகும். அவர்கள் ஒரு நாட்டின் புலம்பெயர்வு சார்ந்த விடயத்தின் முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாடு கொண்டுள்ள ஒரு இழிவுபடுத்துகின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஆலோசனைக்கு உத்தரவாதம் அளித்தல் அரசின் பொறுப்பாகும். புலம்பெயர் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் சட்டங்கள் மற்றும் சர்வதேச நெறிமுறைகளுக்கு இணங்கியொழுகி மனித விற்பனைக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

புலம்பெயர்ந்த ஊழியர்களின் புலம்பெயர்த்த நிலை எது எவ்வாறாக இருப்பினும் அதனைப் பொருப்படுத்தாமல் அவர்கள் அனைவரையும் அங்கீகரிக்கவும். ஆவணப்படுத்தப்படாமை அங்கீகாரம் வழங்காமைக்கு ஒரு காரணமாக இருத்தல் கூடாது. உதவியற்ற மற்றும் பாரபட்சமான கொள்கையின் காரணமாக புலம்பெயர்வோர், முறைசாரா வழிகளில் பயணிக்கின்றனர். ஒப்பந்த மீறல்கள் மற்றும் பதிலளிக்காத உதவி பொறிமுறைகள் அவர்களை ஆவணப்படுத்தப்படாதவர்களாக மாற்றுகின்றன. அவர்களின் சமூக மற்றும் சட்டம் பாதுகாப்பை மறுப்பதானது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

புலம்பெயர்ந்த ஊழியர்களின் ஆவணப்படுத்தப்படாத நிலையை மதித்து அங்கீகரித்து அவர்கள் இன்னலில் உள்ள போது அவர்களின் தேவைகளுக்கு உதவியளிக்க அவசர நடவடிக்கைகளை மேற்













கொள்ளுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நாடு திரும்புதல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு ஆகியவை திருப்பி அனுப்புதல், ஆட்குறைப்பு மற்றும் நாடு கடத்தல் கண்ணோட்டத்தலிருந்து புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும். என அந்நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன் இதன்போது தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: