20 Dec 2022

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும்.

SHARE

(நூருல் ஹுதா உமர்)

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும்.

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தை முகாமை செய்வதற்கான அபிவிருத்தி குழுவின் ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவும் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸானின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஒன்றுகூடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்துகொண்டு கலாச்சார மத்திய நிலையத்தின் தொழிற்பாடுகள், எதிர்கால வேலைத்திட்டங்கள், மேம்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அபிவிருத்தி குழுவினருக்கு விளக்கினார். இந்த கலாச்சார மத்திய நிலையத்தின் தலைவராக மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸானும், செயலாளராக மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் அஸ்வான் மௌலானாவும், உபதலைவராக சாய்ந்தமருது அல்- ஹமரூன் வித்தியாலய அதிபர் எம்.எம். நிபாயிஸும், உபசெயலாளராக அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரும், பொருளாளராக பதவி வழியில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ.பி. நௌஸாத், செயற்குழு உறுப்பினர்களாக ஆசிரியர் எஸ்.ஐ.அமீர், கலைஞர் எம். மாஹிர், கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்ரப், கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி ஏ. தொளபீக்கார், கலைஞர் எம். அமீர், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். முபாறக் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். 25 பேரை கொண்டுள்ள இந்த அபிவிருத்தி முகாமைத்துவ குழுவினர் தொடர்ந்தும் கலாச்சார மத்திய நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிலதாரி நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





 

 

 

SHARE

Author: verified_user

0 Comments: