24 Dec 2022

களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

SHARE

களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும், பிரதேச மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த   நிவழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(23.12.2022) இடம்பெற்றது.

சமத்துவமான உலகத்தை வளர்ப்பதில் புத்தாக்கத்தின் வகிபங்கு உட்பட உள்ளடங்கிய வளர்ச்சிக்கான உருமாறும் தீர்வுகள்" எனும் தொனிப்பொருளில் அமைந்த  இந்நிகழ்வில் சிமிர்னா விசேட தேவையடைய பிள்ளைகள், புகலிடம் விசேட தேவையடைய பிள்ளைகள் மற்றும் மகிழூர்முனை சக்தி வித்தியாலய விசேட தேவையடைய மாணவர்களால் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்ட நிகழ்வுகள் கலந்து கொண்டோர் அனைவரினதும் பாராட்டுதல்களை பெற்றிருந்தது.

இதன்போது முன்மாதிரியான சர்வதேச பெண் தலைமைத்துவ விருதினை பெற்றமைக்காக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மாற்று திறனாளிகள் சங்கத்தினரால் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் .கிருபாகரன்களுதாவளை பிரதேச சபை செயலாளர்அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக சேவைதிருமதி.மனோகரன்மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்(சமூக சேவைதிருமதி  .சந்திரகுமார்மாவட்ட மாற்று திறனாளிகள் சங்க தலைவர்மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மாற்று திறனாளிகள் சங்கத்தினர்பிரதேச செலயக  உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: