1 Dec 2022

கிழக்கு மாகாணத்தில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சூழலிலும், பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன – மதத் தலைவர்கள்.

SHARE

கிழக்கு மாகாணத்தில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சூழலிலும், பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றனமதத் தலைவர்கள்.

கிழக்கு மாகாணத்தில் அனைத்து மத மக்களும்  ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சூழலிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும். அம்பாறை மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில், மத ரீதியானதும், இன ரீதியானதுமான விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாக மதத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் புதன்கிழமை(30) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நான்கு மதத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட மாநாடு ஒன்று நடைபெற்றது. இதன் இறுதியில்சமாதானம் தொடர்பான பாதை கூறும் வெள்ளித்தாரகைள்எனும் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், பின்னர் ஊடகவியலாளர் மாநாடும் நடைபெற்றது. எனினும் சமாதான மாநாட்டில் பௌத்த மதத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், இறுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் பங்கேற்றிருக்கவில்லை. ஆனாலும். இந்து, கிறிஸ்த்தவம், மற்றும், இஸ்லாமிய மதத் தலைவர்கள் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்கள்…. கிழக்கு மாகாணத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்த்தவம், மற்றும் பௌத்த மதத்தவர்கள் என தமிழர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்த்தவர்களும், மற்றும் பௌத்த மக்களும், மிகவும் அன்னியோனியமாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் இந்துக்களின் புனித தலமாக விளங்கும் கோணேஸ்வரர் ஆலம் ஆக்கிரமிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மேய்சல் தரைப்பிரதேசமாக விளங்கும் மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் நில ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன. அம்பாறை நிந்தவூரில் யும்மா பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான விடையங்களை களையவேண்டும். என அவர்கள் இதன்போது தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: