19 Dec 2022

இந்து சமய திணைக்களத்தினால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200வது ஜனனதின விழா மட்டக்களப்பில்.

SHARE

இந்து சமய திணைக்களத்தினால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200வது ஜனனதின விழா மட்டக்களப்பில்.

தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200வது ஜனன தின விழா ஞாயிற்றுக்கிழமை(18)  மட்டக்களப்பில் கோலாகலமான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கிலங்கை இந்து சமய கலாசார மேம்பாட்டு நிறுவனம் என்பன இதனை ஏற்பாடு செய்திருந்தன. இதனையொட்டிய பண்பாட்டுப் பேரணி கல்லடி சித்தி விநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பமானது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் திருஉருச்சிலை ஏந்திய பண்பாட் பேரணி கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியால் வந்து கல்லடி துளசி மண்டபத்தை அடைந்தது. மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ்.நவேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.













SHARE

Author: verified_user

0 Comments: