9 Nov 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடியை உரிய முறையில் தீர்ப்பதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குமாறும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள்.

SHARE

நாட்டின் பொருளாதார நெருக்கடியை உரிய முறையில் தீர்ப்பதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குமாறும்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள்.

கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குமாறும்,நாட்டின் பொருளாதார நெருக்கடியை உரிய முறையில் தீர்ப்பதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குமாறும்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள்.

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி ஜங்க் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (08.11.22) மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்தார்.  இதன்போது நல்லாட்சிகான தேசிய முன்னணி(NFGG) சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரும் நகரசபை உறுப்பினருமான ALM சபீல் நளீமி, மற்றும்  தலைமைத்துவ சபை உறுப்பினரும் நகரசபை உறுப்பினருமான திருமதி பஹ்மியா ஷரீப் ஆகியோர் அவருடனான சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

தற்பொழுது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களும் குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற விடயங்கள் குறித்து மிகத் தெளிவான கலந்துரையாடல் ஒன்றினை  உயர்ஸ்தானிகருடன் முன்னெடுத்திருந்தனர்.

மக்கள் வறுமைக்கோட்டின் கீழ்  வாழும் மாவட்டங்களில் முதலாம்  இடத்தில் காணப்படுகின்ற மட்டக்களப்பு மாவட்டம், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளினால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

யுத்தம் அதற்கு பின்னரான, சுனாமி,  ஈஸ்டர் குண்டு தாக்குதல், கொவிட் போன்ற பல்வேறு பட்ட காரணங்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த கிழங்கிலங்கை மக்களின் வாழ்வாதாரம் தற்போது மீண்டும் இந்த பொருளாதார நெருக்கடியினால் கேள்விக்குறியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இன்று அதிகமான ஆண்களும் பெண்களும் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை நோக்கமாகக் கொண்டு செல்கின்றனர்.  இதனால் அதிகமான பிள்ளைகள் தற்பொழுது பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலர்கள் என பலரும்  போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கான உடனடி வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் முன்வரவேண்டும் என   அவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மக்களின் இந்த கஷ்டமான நிலைமைக்கு காரணம் ஊழலும், மோசடியும் நிறைந்த கடந்தகால ஆட்சிமுறைமையே ஆகும்.   ஆகவே இந்த பொருளாதார நெருக்கடியினை உரிய முறையிலும் உடனடியாகவும்  தீர்ப்பதற்கான உயர் மட்ட அழுத்தங்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா  வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கான இலவச ஆங்கில மொழிப்புலமை , மற்றும் தொழில்சார் பயிற்சிகளை வழங்குகின்ற வகையில் மட்டக்களப்பினை மையமாகக் கொண்டு பயிற்சி நிலையமொன்றினை  இங்கு ஆரம்பிக்க வேண்டும் எனவும் இதன்மூலம் முறையான தொழில் வாய்ப்புகளை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம்  கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் தங்களது கோரிக்கைகளை  NFGG ஆவண வடிவிலும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: