மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் செவ்வாய்கிழமை(29) அதிகாலை 3 மணியளவில் புகுந்த 3 காட்டு யானைகளால் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த வீடு ஒன்றையும் முற்றாக உடைத்து தாக்கி விட்டுச் சென்றுள்ளன.
அக்குறித்த வீட்டை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியிருந்த நிலையில் அதனை வெளிநாட்டிலுள்ள தனவந்தர்கள் சிலர் இணைந்து புணரமைத்துக் கொடுத்திருந்த நிலையில் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று செவ்வாய்கிழமையும் அதே வீட்டை மீண்டும் இவ்வாறு காட்டு யானைகள் துவம்சம் செய்திருப்பதானது மிகுந்த வேதனையளிப்பதாக அவ்வீட்டில் தனிமையில் வசித்துவரும் பெண் தெரிவிக்கின்றார்.
கணவனைப் பிரிந்த நிலையில் ஒரே மகளை விடுத்தி ஒன்றில் படிப்பதற்காக விட்டு விட்டு குறித்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வரும் குறித்த பெண் அயல் வீட்டிற்கு நித்திரைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் யானைகள் வீட்டை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளன. எனவே கருணையுள்ளம் கொண்ட யாராவது தனது வீட்டை புணருத்தாரணம் செய்து தருமாறும், அப்பகுதியில் யானைப் பாதுகாப்பு வேலியையும் அமைக்குமாறும் அப்பெண் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவில் மிக நீண்டகாலமாவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகள் அதிகரித்த வண்ணமுள்ளதாகவும், யனை பாதுகாப்பு வேலி அமைக்குமாறு கோரியும் இதனை யாரும் செவிசாய்க்கவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment