மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர்களை வரவேற்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன்
பொது முகாமையாளராக புதிதாக பதவியேற்ற ஸ்ரீமத்
சுவாமி நீலமாதவனந்தஜீ மகராஜ் மற்றும் இந்தியாவிலிருந்து
புதிதாக வருகைதந்த உதவி முகாமையாளர் ஸ்ரீமத்
சுவாமி சுரார்ச்சிதானந்தர் அவர்களையும் வரவேற்கும் நிகழ்வு 15.11.2022 அன்று மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு விவேகானந்த
தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாதாந்த பொது ஒன்றுகூடலுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வு விவேகானந்த தொழில்நுட்பவியல்
கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான
சான்றிதழ்களும் பயிற்சியின் போது நன்னடத்தை
வெளிப்படுத்திய பயிலுனர்களுக்கு ஞாபக சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்து. அத்துடன் பயிற்சி காலப்பகுதியில் தங்கள் விசேட கலைத்திறமைகளை வெளிப்படுத்திய பயிலுனர்களிற்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் நிறைந்த
புத்தகங்கள் விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment