6 Nov 2022

பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.

SHARE

பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலங்கள், மற்றும் பொரும்போகத்திற்காக விதைக்கப்பட்டுள்ள பல வயல்களும் வெள்ளத்தில் மூழ்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்களும், விவசாயிகளும், முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் ஞாயிற்றுக்கிழமை(06) வெட்டப்பட்டது.

பிரதேச செயலகம். பிரதேச சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், உள்ளிட்ட பல அசர நிறுவனங்கள் ஒண்றிணைந்து இதனை பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகழப்பட்டு, மட்டக்களப்பு வாவியில் கலக்கும் மழைவெள்ளத்தை கடலுக்கு வழிந்தோடச் செல்லும் நடவடிக்கை இதன்போது முன்நெடுக்கப்பட்டள்ளது.

இந்நிலையில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் வரதன் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் நாகரத்தினம், உள்ளிட்ட குழுவினர் சனிக்கிழமை(05) பெரியகல்லாறு முகத்துவராத்திற்குச் சென்று பார்வையிட்டு உடனடியாக இதனை வெள்ளநீரை வெட்டி கடலுடன் கலக்கச் செய்யவேண்டும் என இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குறித்த முகத்துவாரம் வெட்டப்படும் இடத்திற்கு மட்டக்களப்பு மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர். கோஇகருணாகரம்(ஜனா), மண்முனை பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன்,  பிரதேச சபை உறுப்பினர்களான சுதாகரன், வேணுராஜ், கணேசநாதன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின், இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் இன்றயத்தினம் நேரில் வந்து பார்வையிட்டனர்.

படுவாங்கரைப் பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள்  வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் என்னிடம் தெரிவித்திருந்தனர் அதற்கிணக்க கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில் முகத்துவாரத்தை வெட்டி ஆற்று வெள்ளத்தை குறைத்தால்தான் வேளாண்மைச் செய்கையைப் பாதுகாக்கலாம் என  நான் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தேன். அதற்கு கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. அதந்த வகையில் பெரியகல்லாறு முகத்துவாரம் நீண்டகாலமாக வெட்டப்படாமலுள்ளதனால் வேளாண்மைச் செய்கையும், மீன்பிடியும், பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது வவுணதீவு பாலத்தையும் ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதாக அறிய முடிகின்றது. தற்போது வெட்டப்படும் முகத்துவாரத்தினால் வெள்ளநீர் வடிவது குறையாவிட்டால் இன்னும் ஒரு சில நாட்களில் மட்டக்களப்பு முகத்துவாரமும் வெட்டவேண்டி ஏற்படும் என வெட்டப்படும் கல்லாறு முகத்துவாரத்தை நேரில் பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: