பட்டிருப்பு தேசிய பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் எஸ்.தேவகுமார் சிறந்த விஞ்ஞான மேம்பாட்டு ஆசிரியராக தெரிவு.
இலங்கை தேசிய விஞ்ஞான நிறுவகத்தினால் (National science Foundation) வழங்கப்பட்ட இவ்வாண்டுக்கான "சிறந்த விஞ்ஞான மேம்பாட்டு ஆசிரியர்"(National award for the best science teacher 2022) இற்கான தேசிய விருதினை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி , இரசாயனவியல் ஆசிரியர் எஸ்.தேவகுமார் பெற்றுள்ளார்.
கல்வி அமைச்சின் ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டுக்கிளை அத்துடன் தேசிய நீர்வழங்கல் வடிகால் வாரியம் இணைந்து நடத்தும்
இளம் ஆராய்ச்சியாளர் போட்டி நிகழ்ச்சியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்
, தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு
இவரின் நெறிப்படுத்தலே காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments:
Post a Comment