தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையும் கருத்தரங்கும்.
மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் வினைத்திறனை விருத்தி செய்வதற்கான இலவச முன்னோடிப் பரீட்சையும் கருத்தரங்கும் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சனிக்கிழமை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. புவனேஸ்வரி ஜீவகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.சோ.தமிழ்வாணி, மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.எஸ்.சந்திரசோதி, திருமதி.சந்திரவாணி மனோகரன், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எஸ்.சத்தியசீலன், எஸ்.ஞானசிறி மாணவர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் வளவாளர்களாக ச.ஜெயகரன் ஆசிரியர் அவர்களும், வ.செல்வராஜா ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டதுடன், இம் மாணவர்களுக்கு உளவளத்தினை ஆற்றுப்படுத்துவதற்கான நிகழ்வினை பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சத்தியவாணி மனோகரன் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment