30 Nov 2022

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்.

SHARE

(சுதன்)

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம்  மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி  பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலிலும் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன் அவர்களின் நெறிப்படுத்தலிலும்  செவ்வாய்க்கிழமை(29) 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நடைபெற்றது. 

சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்  கே.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. புவனேஸ்வரி ஜீவகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.சோ.தமிழ்வாணி, மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், ,எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலயங்கள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள், மயானங்கள் ஆகியன இதன்போது சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டதுடன் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்பட்ட இடங்களும் முற்றுமுழுதாக சுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















SHARE

Author: verified_user

0 Comments: