2022 ம் ஆண்டு தேசிய ரீதியாக சுகாதார அமைச்சுடன் மலேரியா நோய் தடுப்பு இயக்கம் இணைந்து நடாத்திய மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போட்டியில் மட்டக்களப்பு மலேரியா நோய் தடுப்பு இயக்கம் சாதனை படைத்துள்ளது.
மலேரியா தொடர்பான விழிப்புணர்வு போட்டியில் (Youtube, Facebook) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட மட்டக்களப்பு மலேரியா தடை இயக்கம் சார்பாக போட்டியிட்ட பட்டிப்பளை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவு Youtube video பிரிவில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் மாகாண மட்டத்தில் Face book பிரிவில் கிரான் சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவு முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த (14) திகதி நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்று சேவைகள் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போது இவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment