காத்தான்குடி ஹாட்வெயார் களஞ்சியசாலையில் தீப்பரவல் 40 கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி-01, முதியோர் இல்ல குறுக்கு வீதியில் அமைந்துள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றுகக்குச் சொந்தமான களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.
செவ்வாய்கிழமை (15) நள்ளிரவு 1.30 மணியலவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ பரவலின் காரணமாக களஞ்சியசாலை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், மின்னொழுக்கே இதற்கு காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இக்களஞ்சியசாலையில் 40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும்
அவை அனைத்தும் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாகவும் அதன் உரிமையாளர் நஜீப் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதான வீதிலுள்ள கொழும்பு ஹார்ட்வெயார் நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலை
இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment