மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா - 2019,2020.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா ஞாயிற்றுகிழமை (27) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி.தவத்திருமகள்
உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர்
ஏ.அரவிந்தகுமார், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்விற்கு சிறப்பு அதியாக கிழக்கு பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் வல்லிபுரம் கணகசிங்கம் கலந்து
கொண்டார்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு
வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி
விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி, பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் வீ.வாசுதேவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மாகாண, மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களும் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறப்பாக திறமைகளை வெளிகாட்டிய மாணவிகள் மற்றும் கல்வி பொது தராதர சாதாரண தரம், உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் இதன்போது அதிதிகளால் பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு பாடசாலையின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவிகள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டதோடு இங்கு மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment