27 Nov 2022

சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு விற்பனை பொரிசாரால் பறிமுதல், 11000 மி.லீ கசிப்பு 6 சந்தேக நபர்கள் கைது.

SHARE

சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு விற்பனை பொரிசாரால் பறிமுதல், 11000 மி.லீ கசிப்பு 6 சந்தேக நபர்கள் கைது.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்பட பல இடங்களில் கசிப்பு, மற்றும் கோடா என்பன சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, துரிதமாக செயற்பட்ட பொலிசார் பெருமளவு கசிப்பு மற்றும் கோடா போன்றவற்றையும், அதன் உற்பத்திற்கு உபயோகிக்கப்பட்ட பொருட்களையும், சம்மந்தப்பட்ட ஒரு பெண் உட்பட 6 பேரையும்  சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதுடன், 2 மோட்டார் சைக்கிளையும் சனிக்கிழமை (26) கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

மட்டக்களப்பு மாவட்டத்தின் காஞ்சிரங்குடா பகுதியிலிருந்து பழுகாமம் பகுதிக்கு வரலிகளில் 2 மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத கசிப்பு எடுத்து வந்த நிலையில் அதனை கையும் மெய்யும்மாக பொலிசார் மிகவும் சூட்சுமமான முறையில் பறிமுதல் செய்து, சந்தேக நபர்களையும், கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மகிழூர், மற்றும் மகிழூர்முனை ஆகிய பகுதிகளிலும், கசிப்பு உற்பத்தி செய்து வந்த நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அதனை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நடவடிக்கைகளில்  11000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 பெண் அடங்கலாக 6  சந்தேக நபர்கபளைக் கைது செய்துள்ளதுடன் 2 மோட்டார் சைக்கிள்களையும், பரல்கள், கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர்கள், பானைகள், போன்றவற்றையும், கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களையும், கசிப்பையும், சந்தேக நபர்களையும், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் இதன்போது தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பெயரில், களுவாஞ்சிகுடி பிரதே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி அபேயவிக்கிரமவின் தலைமைத்துவத்தின் கீழான பொலிசஸ் குழு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.














SHARE

Author: verified_user

0 Comments: