கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக மண்முணை தென் எருவில் பற்று பிரதேச சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்.
மேற்படி சபையின் 56 வது சபை அமர்வு களுதாவளையில் அமைந்துள் பிரதேச சபையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது சபைக்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாட்டில் பொருட்களுக்கு ஒரு நாளைக்கு ஒவ்வொரு விலைவாசியாக எமது எதிர்காலம் பூச்சியத்தில்தான் போய்கொண்டிருக்கின்றது. எமது சபையால் 2022 இற்கு முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைகளில் 50 வீதமான வேலைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படாமலுள்ளன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. வருகின்ற மழைகாலத்திற்கு பாவிப்பதற்காக வேண்டிய பழுதடைந்துள்ள ஜே.சி.பி வாகனத்தை திருத்த வேண்டும். உலக வங்கியால் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் கட்டப்பட்ட மீன் சந்தைத் தொகுதியை இம்மாத்திற்குள் திந்ந்துவைக்க வேண்டும். அதனைப் பார்வiயிடுவதற்கு உலக வங்கி பிரதிநிதிகள் எதிர்வரும் முதலாம் திகதி வரவுள்ளார்கள். இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில்தான் எதிர்காலத்தில் மேலும் பல செயற்றிட்டங்கள் எம்மை நாடி வரும். தற்போதைய நிலையில எமது சபையில் உள்ள நிதி போதாதுள்ளது ஆனாலும் அரசாங்கமும் எமக்கு எதுவித ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே உலக வங்கி மூலம்தான் உதவிகளைப் பெற்று கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. மகிழூரில் அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார மண்டபம இதுவரையில் முடிக்கப்படாமலுள்ளன. அக்கட்டடத்திற்குரிய மிகுதி நிதியை விரைவாக வழங்குதவற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் தெரிவித்திருக்கின்றார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையால் திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட விதிகள் அனைத்தும் தற்போது குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால் அனைத்து கிராமங்களிலும் வீதிகள், வீடுகளும், வெள்ளத்தில் தாழும் நிலமை ஏற்படும். இதனால் வருகின்ற மழை வெள்ளத்தில் மக்கள் பாதிப்படையும்போது அனைத்து விடைங்களும். எமது பிரதேச சபைக்குத்தான் வரவுள்ளது. எனவே அனைத்திற்கும் எமது சபை தயாராக இருக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இச்சபை அமர்வில் களுவாஞ்சிகுடி பொது மைதானத்தின் ஒரு பகுதியில் மாதுளை செய்கைக்குரிய கட்டடம் கட்டுவதற்குரிய அனுமதியை வழங்குவதில்லை, மிக நீண்ட காலமாக பழுதடைந்த கிடக்கும் N;ஜ.சி.பி வாகனத்தை திருத்துதல், 2023 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்தல், சபைக்குச் சொந்தமான கடைகளை வாடகைக்கு விடுவதற்கு குத்தகைக்கு விடுதல், பயிலுனராக வரும் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொடுப்பனவு வழங்குதல், களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட மீன் சந்தைத் தொகுதியை எதிர்வரும் முதலாம் திகதி காலை வேளையில் திற்து வைத்தல், போன்ற பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன்போது பிரதேச சபை நிருவதாகத்தால் சபைக்கு முன் வைக்கப்பட்ட மாதாந்த கணக்கறிக்கை சபை உறுப்பினர்களால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த பிரதேச சபை அமைர்வில் மண்முனை தென் எருவில் பற்று – களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கு எதிராக, தவிசாளருக்கு எதிராகவும், தனக்கு திராகவும், மண்முனை தென் எருவில் பற்று – களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் 100 மில்லியன் ரூபா நஸ்ட்ட ஈடு கோரி வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக இதன்போது மே.வினோராஜ் சபையில் தெரிவித்தார்.
தொடர்ந்து வீதி, மயானம், உள்ளிடடபல பிரச்சனைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டதோடு வாத பிரதிவாதங்களும், இடம்பெற்று சபை அமர்வு நிறைவு பெற்றது.
0 Comments:
Post a Comment