சர்வதேச இடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு உயிர் காப்பு விழிப்புணர்வு பயிற்சியும் கண்காட்சியும்.
சர்வதேச இடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு உயிர் காப்பு விழிப்புணர்வுப் பயிற்சியும் கண்காட்சியும் மாணவர்கள், பொதுமக்கள், படையினர், பொலிஸார் முன்னிலையில் இடம்பெற்றது.
திருகோணமலை நகர கடற்கரையில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), இளைஞர் அபிவிருத்தி அகம், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம், இலங்கை பொலிஸ், கடற்படை ஆகியவை கூட்டிணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்திருந்தன.
நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான டி.டி.வி. பத்திரண, லக்மால் குணத்திலக்க, உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கே. சுகுணதாஸ், இளைஞர் அபிவிருத்தி அகம் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் திருகோணமலை வலய பிரதிக் கல்விப் பணிப்hளர் சுபாங்கி ஜோன்ஸன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உயிர்காப்பு நிகழ்ச்சி முன்னோட்ட கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்க, இது குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு பெருந்துணை புரியும். நீரில் மூழ்கி மரணிப்போரில் மீட்டு உயிர் காப்பது ஒரு உயிர் கொடுத்து வாழ்வழிக்கும் ஒரு செயலாகும் வைத்தியர்கள் வருவதற்கு முன்னர் உயிர்காப்பதுதான் முழுமுதற் கடமை. கடந்த காலத்தில் திருகோணமலை கடலில் மூழ்கிய 27 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 258 பேர் காப்பாற்றப் பட்டுள்ளார்கள்.
நீரில் மூழ்குவோர் நாமாக இருக்கலாம், நமது பெற்றோராக இருக்கலாம் சகோதரர்களாக இருக்கலாம், முன் பின் தெரியாதவர்களாக இருக்கலாம் சக மாணவர்களாக இருக்கலாம் யாராக இருந்தாலும் அவர்களை தக்க தருணத்தில் உயிர் காப்பதற்கு நாம் உயிர்காப்புப் பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். எனவே நீச்சலையும் உயிர்காப்பு பயிற்சிகளையும் கற்றுக் கொள்வது மிக முக்கியமாக மாணவர்களுக்கு நல்லது என நான் கருதுகின்றேன்.” என்றார்.
0 Comments:
Post a Comment