3 Oct 2022

கிழக்கு மாகாணத்தில்பெண்கள் சிறுவர்கள் தொடர்பான விடங்களைக் கையாளும் விதத்தை அறிந்து கொள்ளும் கள விஜயம்.

SHARE

கிழக்கு மாகாணத்தில்பெண்கள் சிறுவர்கள் தொடர்பான விடங்களைக் கையாளும் விதத்தை அறிந்து கொள்ளும் கள விஜயம்.

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் சிறுவர்கள் தொடர்பான வியடங்களைக் கையாளும் விதத்தை அறிந்து கொள்ளும் கள விஜயம் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ திலீப்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மட்ட பெண்கள் வலையமைப்பு செயற்பாட்டாளர்கள்சிறுவர் பெண் பிள்ளைகள் சார்ந்த அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்பெண்கள்மாவட்டபிரதேச செயலக அலுவலர்கள்துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட கள வியத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் நலிவுற்ற பெண்கள் சிறுவர்கள் தொடர்பான சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டம் எனும் நிகழ்ச்சி அமுலாக்கத் திட்டத்தின் கீழ் இந்த கள விஜயம் இடம்பெற்று வருகின்றது.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்நிறுவனம் இந்த திட்ட அமுலாக்கத்திற்கு நிதி அனுசரணையுடன் வழங்கி வருகின்றது.

திருகோணமலை மாவட்ட அரச அதிகாரிகள் செயற்பாட்டாளர்களின் பிரசன்னத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகபிரதேச செயலக அரச அதிகாரிகள்பெண்கள் செயலணியினர்செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த கள விஜயத்தில் பங்கு பற்றியுள்ளனர்.

குழுவினர் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையின் ஒரு பிரிவாக இயங்கும் சிறுவர் நட்பு நிலையம்மட்டக்களப்பு நகர பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து கொண்டனர்.

இது பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலீப்குமார்மிகவும் காத்திரமான இலக்காக பெண்களையும் சிறுவர்களையும் கண்ணியப்படுத்திக் கொண்டு அவர்களை விசேட இலக்குக் குழுவாகக் கருதி அவர்களது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றோம்இது கிழக்கு மாகாணத்தில் உரிய திணைக்களங்களோடு தொடர்புபட்டு இணைப்பாக்கம் செய்து அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த அடிப்படையிலேயே பெண்களுக்கென நிலைபேறான ஒரு அபிவிருத்தியை நோக்கிபெண்கள் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் தங்களது சமூகபொருளாதாரஉரிமை சார்ந்த விடயங்களை மேம்படுத்திக் கொண்டுபெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பான குடும்ப சமூகச் சூழலை உருவாக்குவதே இதன் இலக்காகும்.

இணைந்து செயற்படுகின்றபோது பெண்கள்பெண் பிள்ளைகள்சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்கலாம் என்பது அனுபவ ஆய்வுகள் தெரிவிக்கின்றனஅதனை அடிப்படையாகக் கொண்டே இந்த கள விஜயங்கள் இடம்பெற்று வருவதாக திலீப்குமார்  மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்மாவட்ட உதவி அரசாங்க அதிபர் .நவேஸ்வரன்கே.கருணாகரன்திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுவர்ணா தீபானி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டு பெண்கள் மேம்பாடு சம்பந்தமான  கருத்துக்களைத் தெரிவித்தனர்
















SHARE

Author: verified_user

0 Comments: