ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றி வரும் தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று (30) ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ், தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரனிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய இவ்வூக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.
கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர்,கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் என்.தனஞ்சயன்,
வாழைச்சேனை பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி லசந்த பண்டார,
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு , வாழைச்சேனை மத்தி ஆகிய பிரதேச செயலகங்களின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.ஏ.எம்.நளீம்,ஏ.எல்.பீர்முஹம்மத், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான்,
ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன்,ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஏ.சீ.நியாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போதுஅதிதிகள் மற்றும் சமூக நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர்களும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விசேஷ வேலைத் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு இவ் ஊக்குவிப்பு நிதி வழங்கும் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 15 பேருக்கு நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் தியாகி அறக்கொடை நிதியத்தினால்நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment