மின்னொளி கரப்பந்தாட்ட சமர்.
மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு கழகத்தின் 13 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமர் திங்கட்கிழமை(24) இரவு மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 15 அணிகளுக்கு மேல் பங்குபற்றியது இருப்பினும் இறுதிப்போட்டிக்கு எவர் சைன் விளையாட்டு கழகம் மற்றும் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் என்பன பலப்பரீட்சை நடாத்தின.
இப்போட்டியில் முதலாமிடத்தை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு கழகமும், இரண்டாம் குருக்கள்மடம் இடத்தை ஏசியன் விளையாட்டு கழகமும் பெற்றன. இதனிடையில் போட்டியின் அதிசிறந்த ஆட்ட நாயகனுக்கான விருது குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் லக்சானுக்கு கிடைத்துள்ளது.
இதன்போது முதலிடம், இரண்டாம் இடம்பெற்ற இவ்இரண்டு அணிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கேடயங்கள் என்பன வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment