14 Oct 2022

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து இருவர் ஸ்த்தலத்திலேயே மரணம்.

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து இருவர் ஸ்த்தலத்திலேயே மரணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில்  வேகமாகச் சென்று வாகனமொன்றில் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்லத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18வயதுடையவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.








SHARE

Author: verified_user

0 Comments: