(சோபிதன்)
மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா.மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு வியாழக்கிழமை(20) மேற்படி வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பு நடைபெற்றது. இதன்போது அதிபர், ஆசிரியர்களுக்க மாணவர்கள் மலர் மாலை அணிவித்து அணிநடை மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.
இவித்தியாலய அதிபர் வே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் குருக்கள்மடம் விளையாட்டு கழகம், சங்கங்கள், பொதுநல அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வரவேற்பு நடனம், ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு, ஆசிரியர்களின் நடனம், பாடல் இன்னும் பல ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்வுகள் எனப்பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment