புலரும் புது விடியல்" புதுக்கவிதை நூல் வெளியிட்டு வைப்பு.
சம்பூர் சமரனின் “புலரும் புது விடியல்" புதுக்கவிதை நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை 09.10.2022 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாக “அன்பின் பாதை சமூகம்” தன்னார்வ உதவு ஊக்க அமைப்பின் பணிப்பாளர் றொசில்டா அன்டோ தெரிவித்தார்.
“அன்பின் பாதை” எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய வட்டத்தின் அனுசரணையில் “புலரும் புது விடியல்" புதுக்கவிதை நூல் வெளியீடு இலக்கிய ஆர்வலர் கனக தீபகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
முதல் பிரதி வழங்கல், நவீன இலக்கியத்தின் நகர்வு, நூல் மதிப்புரை, ஏற்புரை உள்ளிட்ட கலை இலக்கிய நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான ஜமுனா சிவசங்கரன், வி. காந்தீபன், ஈச்சிலம்பற்று கொட்டக் கல்விப் பணிப்பாளர் பி. மதிபாலசிங்கம், “அன்பின் பாதை சமூகம்” தன்னார்வ உதவு ஊக்க அமைப்பின் பணிப்பாளர் றொசில்டா அன்டோ உள்ளிட்ட இன்னும் பல பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment