21 Oct 2022

தொற்றா நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்.

SHARE

(நூருல் ஹுதா உமர்)

தொற்றா நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்.

உலக வங்கியின் நிதி  உதவியின் கீழ்  செயற்படுத்தப்படும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்ட கோமாரி ,உல்லே ஆகிய பிரதேச மக்களுக்கு தொற்றா நோய்கள் சம்பந்தமான பரிசோதனைகளை முன்கூட்டியே  மேற்கொண்டு நோய்களை தடுப்பதற்கான  கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக பொத்துவில் பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமையை திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்டு இன்று விரிவுரையும் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின்  உத்தியோகத்தர்களும், கிராம அலுவலர்களும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியும், கோமாரி மற்றும் உல்லே ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளும், திட்டமிடல் கிளையின் PSSP நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தரான ஏ.றஸ்ஸாலிம் மற்றும் பாசித் முகைதீன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: