தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டம்.
தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை பட்டினமும் சூழலும் கடற்கரையோரப் பிரதேசங்கள் சுத்தப்படுத்தி தூய்மையாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்ட செயலாளர் டி.எச்.என் ஜயவிக்கிரமவின் பிரசன்னத்துடன் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் கடற்கரையோரத்தை அண்டிய பகுதிகள் துப்புரவாக்கப்பட்டன.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), இலங்கை பொலிஸ், கடற்படை, திருகோணமலை நகராட்சி மன்றம் இலங்கை கரையோரப் பாதுகாப்பு அமைப்பு இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து முன்னெடுத்துள்ள சிரமதானப் பணியின் துவக்க நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவிச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையின் வடகிழக்குக்கான உதவி முகாமையாளர் ரீ. சிறிபதி, திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கன், “அன்பின் பாதை சமூகம்” தன்னார்வ உதவு ஊக்க அமைப்பின் பணிப்பாளர் றொசில்டா அன்ரோ உட்பட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட செயலாளர் ஜயவிக்கிரம இயற்கையை சேதப்படுத்தாமல் அழிக்காமல் எந்தக் காலமும் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். இந்த தேசிய நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம்” என்றார்.
0 Comments:
Post a Comment