14 Oct 2022

பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்பூட்டல் நிகழ்வு.

SHARE

 பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்பூட்டல் நிகழ்வு. 

பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் வாழ்வகம் விஷேட தேவையுடையோர் அமைப்பினால் விழிப்பூட்டல் நிகழ்வும் மரநடுகையும் வியாழக்கிழமை (13)இடம் பெற்றது.

வாழ்வகம் விஷேட தேவையுடையோர் அமைப்பினால் தலைவர்
வா.பாலகப்போடி தலைமையில் வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமான விழிப்பூட்டல் ஊர்வலம் வாழ்வகம் அலுவலகம் வரை சென்று அங்கு நிகழ்வுகளும் மரநடுகையும் இடம் பெற்றது.

பேரிடர் அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான உரைகளும் விழிப்புணர்வுகளும்  இதன்போது இடம்பெற்றது. வாழ்வகம் அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் அருள்ராஜா ஒருங்கிணைப்பில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் அன்பழகன், கமிட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் காண்டீபன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வாழ்வகம் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: