19 Sept 2022

வன்முறைக்கெதிரான வெற்றி" செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு.

SHARE

வன்முறைக்கெதிரான வெற்றி" செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு.

''வன்முறைக்கெதிரான வெற்றி" செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில்  இடம்பெற்றுள்ளது. தேவை நாடும் மகளீர் அமைப்பு, யூ.எஸ்.எயிட் இன் நிதியுதவியின் மூலம் "வன்முறைக்கு எதிரான வெற்றி செயற்திட்டத்தின் ஊடாக பாலியல் பால்நிலைக்கெதிரான வன்முறைகளை இனங்கண்டு அவற்றிலிருந்து வெற்றிக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த செயற்றிட்டத்தின் ஊடாக, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கவும், மாவட்ட, பிராந்திய தேசிய ரீதியில் செயற்படுவதற்கான நான்காண்டுகாலப் பயணத்தின் ஆரம்ப நிகழ்வின் அங்குரார்ப்பணமே  இடம்பெற்றுள்ளது.

இச் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் திருமதி.நவரூப ரஞ்ஜினி முகுந்தன் ஆகிய இருவரும் கலந்துகொண்ட நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன், விசேட உளநல வைத்திய நிபுணர் த.கடம்பநாதன்,  மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சந்துனி எதிரிசிங்க, பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் அதிகாரிகளும், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்ததுடன், தமது ஆலோசனையினையும் தெரிவித்திருந்தனர். 

இதன்போது தேவை நாடும் மகளீர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கங்கள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தேவை நாடும் மகளீர் அமைப்பினால் இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளையும் இல்லாதொழிக்கும் நோக்கில் கடந்த 3 தசாப்தங்களாக செயற்பட்டு வருகின்றதுடன், உளவியல், மனநல ஆலோசனை, சட்ட உதவி, அவசரகால தங்குமிட வசதிகள் மற்றும் 24 மணிநேர துரித தொலைத்தொடர்பு சேவைகளையும் வழங்கிப் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 





 

SHARE

Author: verified_user

0 Comments: