பாலர் பாடசாலைக்கு புத்தகப்பைகள் மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பட்டிருப்பு சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்குரிய தூண்கள் மற்றும், அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புத்தகைப் பைகளும் செவ்வாய்கிழமை(20) வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் சொந்த நிதியிலிருந்து இந்து உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக பாலர் பாடசாலை நிருவாகம் இதன்போது தெரிவித்தது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ், பட்டிருப்பு கிராம பெரியோர்கள், பெற்றோர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்ததோடு, தமது கிராம சிறார்களின் அடிப்படைக் கல்வி வளற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச சபை உறுப்பினர் வினோராஜிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment