மகளிர் அணிச் செயலாளராக திருமதி. சுசிகலா அருள்தாஸ் தெரிவு.
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் புதிய மகளிர் அணிச் செயலாளராக முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக திருமதி. சுசிகலா அருள்தாஸ் தெரிவாகியுள்ளார். 04.09.2022 திகதி இடம் பெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் வைத்து கட்சியின் புதிய தலைமை பணிக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 19 பேரடங்கிய தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை பணிக்குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ள ஒரே பெண் இவராகும். திருமதி.சுசிகலா அருள்தாஸ் அவர்கள் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் இணைந்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment