புத்தளம் தள வைத்தியசாலையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
புத்தளம் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவின் ஹுசைனிய்யா புரத்தை சேர்ந்த 24 வயதான இளம் தாய் ஒருவரே இவ்வாறு நான்கு குழந்தைகளை கடந்த 8ம் மாதம் 27 ஆம் திகதி பிரசவித்துள்ளதுள்ளார்.இவ்வாறு பிறந்த குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையொன்றும்இ மூன்று பெண் குழந்தைகளும் உள்ளடங்குகின்றது.
இத்தகவலை அறிந்த பலர் அந்த தாய்க்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வரும் வேளையில் அக்குடும்பத்தவரின் ஏழ்மை நிலைமையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் இனஇ மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான " சமூகஜோதி" வாமதேவன் தியாகேந்திரன் அவர்கள் உதவ முன்வந்துள்ளார்.
முதல் கட்டமாக அக் குழந்தைகளின் பராமரிப்பிற்காக ஒரு இலச்சம் ரூபாய் உதவித்தொகையினை கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் மூலம் அக்குழந்தைகளின் தாயிடம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதே வேளை தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான மிக்க சேவையை பாராட்டி கல்குடா மீடியா போரத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment