உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு.
அதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(09) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உளநல பிரிவும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வு, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனியானது பிரதேச செயலகத்தைச் சென்றடைந்ததும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் அவர்களினால் பிரச்சனைகளைக் கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கதிர்காமநாதன் புவனேந்திரநாதன், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அமரசேன உதயசூரிய, உளநல வைத்தியர் திருமதி.யூடி ரமேஷ் ஜெயக்குமார் சகாயராணி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment