தற்போது பொருளாதார வீழ்ச்சியால் அதிகம் எமது விவசாய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர் விதைகளிற்கான முதலீடு மற்றும் உரத்திற்கான விலைவாசி என்பன அதிகரித்து காணப்படுவதுடன், உற்பத்திகளுக்கான உரிய சந்தைப்படுத்தலும் கிடைக்காத நிலையில் பலர் இந்த விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதில் பின்வாங்கி வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், பல விவசாயக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இதனை கருத்தில் கொண்ட விவேகானந்த சமுதாய அறக்கட்டளை தங்களது நன்கொடையாளர்களின் உதவி மூலமாக தற்போது முதற்கட்டமாக 15 குடும்பங்களிற்கு நிலைக்கடலை உற்பத்திக்கான விதை பருப்பு மற்றும் உரம் என்பவற்றை வழங்குவதுடன் அவர்களின் சந்தைப்படுத்தலுக்கான உதவியினையும் செய்வதற்கு முன்வந்துள்ளனர்.
இதற்கான உதவியினை கனடாவில் வசிக்கும் இ.ஏகாம்பரம் அவர்களின் பிறந்ததின் நிகழ்வில் அவர்களின் உறவுகள் நண்பர்களால் வழங்கப்பட்ட பணத்தின் ஒருபகுதியான ரூபா ஏழு இலட்சத்து ஐம்பதாயிரத்தினை இந்த செயற்பாட்டிற்காக வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கான நிலக்கடலை விதைகளை வழங்கும் நிகழ்வு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் (கிரான்) பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு அவர்களின் முன்னிலையில் அப்பிரதேச விவசாய போதனாசிரியர் க.நிசாந்தன் அவர்களின் ஆலோசனையுடன் நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டது.
வெளிநாடுகளில் வாழும் உறவுகள் இவ்வாறு தங்களது கொண்டாட்டங்களை மட்டுப்படுத்தி பல உதவித்திட்டங்களை தங்களுடாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும், அவ்வாறே இ.ஏகாம்பரம் அவர்களும் அவரின் 75வது பிறந்ததின கொண்டாட்ட நிகழ்வில் உறவுகள், நண்பர்களால் வழங்கப்பட்ட நிதி முழுவதனையும் அவரால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் கல்வி செயற்பாட்டிற்கு வழங்கவிருப்பதுடன் அதில் ஒரு பகுதியினை இவ்வாறு வாழ்வாதார உதவிக்கும் வழங்கியுள்ளார் என விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment