மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மொழி தின போட்டி நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மொழி தின போட்டியின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள நாவற்காடு நாமகள் வித்தியாலய தேசிய பாடசாலையில் வியாழக்கிழமை (08) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து வலயங்களையும் சேர்ந்த பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நடுவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் பண்பாட்டு கலாசார வாத்தியங்கள் இசைக்க, நடனத்துடன் நிகழ்வுக்கு வருகை தந்த பிரமுகர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து , இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, வலய கீதம் இசைக்கப்பட்டதையடுத்து மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.
அதனையடுத்து, தமிழ் மொழி தினப் போட்டிகள் நடுவர்களுக்கான அறிவுறுத்தலின் பின்னர் போட்டிகள் ஆரம்பமாயின.
மாவட்டத்தின் ஐந்து வலயங்களுக்குள்ளும் நடைபெற்ற போட்டி முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வலயம் முதலிடத்தையும், மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு வலயங்கள் இரண்டாம் இடத்தினையும், கல்குடா வலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment