11 நாட்கள் 1300 கீலோ மீற்றர் தூரத்தினை பயணித்து முடித்த இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
இலங்கையின் அனைத்து கரையோரப் பிரதேசங்களையும் மையப்படுத்தி தொடர்ச்சியாக 11 நாட்கள் 1300 கீலோ மீற்றர் தூரத்தினை பயணித்து முடித்த இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு
கடலோரத்தினை பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து பாதுகாத்து தூய்மைப்பபடுத்துவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஓசின் வயோப் அமைப்பின் ஏற்பாட்டில் மட்க்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு சைக்கில் ஓட்டத்தில் கலந்து கொண்டு நிறைவு செய்த சைக்கிள் ஓட்டிகளை கௌரவிக்கும் நிகழ்வு எருவில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை 11.09.2022 நடைபெற்றது.
மேற்படி சைக்கிள் ஓட்டமானது கடந்த 01.09.2022 திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பிப்பப்பட்டு நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இடமான மட்டக்களப்பில் ஞாயிற்றுக் கிழமை 11.09.2022 நிறைவுற்றது.
குறித்த சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபட்ட அமலநாதன் சஞ்ஜீவன். குமாரசிங்கம் அனாமியன் ஆகிய மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு நடை பெற்றது. அதன் ஒரு கட்டமாக எருவில் கிராமத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதன் பிரகாரம் சைக்கிள் ஓட்டிகளை மாலை அணிவித்து வரவேற்றதுடன் நினைவுச் சின்னமாக ஆலய வளாகத்தில் மரக்கண்டு ஒன்று நடப்பட்டது இந் நிகழ்வில் ஆலய நிருவாகத்தின் எருவில் கலைக்கமல் கழகத்தினர்,எருவில் சுதந்திரம் விiளாயட்டுக் கழகத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment