3 Sept 2022

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் சாதனை மருத்துவம் -02, பொறியியல்-02, உட்பட பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.

SHARE

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் சாதனை  மருத்துவம் -02,  பொறியியல்-02, உட்பட  பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.

இம்முறை வெளியாகிய .பொ.. உயர்தரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட  கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம்  சாதனை படைத்துள்ளதாக வித்தியாலய அதிபர் கே.செல்வராஜா தெரிவித்தார். இதற்கமைய  மருத்து துறையில் இருவரும், பொறியியல் துறையில் இருவரும், உட்பட ஏனைய துறைகளைச் சேர்ந்த  அதிகளவு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்இதில் சிறப்பு பெறுபேறுகளைப் பெற்று மாணவர்கள் பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.

மருத்துவ துறையில் நா. சனீத் சஞ்ஜீவ் 2, பி. ,வி. சுறோமிலா 2, பி, பொறியியல் துறையில் கி. சனோஜன் 3, ஜெ. பிறெளமிகா  ,2பி, வணிகப் பிரிவில் வா.நேதுசா 3, வி.விதுஷாந் 3, .கிசோன் 2,பி, .நெப்போலியன் 2, சீ, ஜெ.சுவேக்கா 2,பி, கலைப் பிரிவில் சி.சிதுஷா 3, நா.நர்மிதா ,2பி,  . சிறிதரன் 2, பி, ஜெ.அருள்சியா ,பி,சி  ஆகிய சிறப்பு பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இவர்களோடு,  மேலும் பல மாணவர்கள்   பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்கள். இம்மாணவர்களின் வெற்றியில் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விச் சமூகம் ஆகியவற்றுக்கு அதிபர் .செல்வராஜா உள்ளிட்ட பலரும்  நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: