பெரும்போக உணவு உற்பத்தி முன்மாதிரி விவசாயத்திட்டம் - மாவட்ட அரசாங்க அதிபரினால் அங்குரார்ப்பணம்.
''ஒன்றிணைவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்'' பசுமைப்பயணம் பெரும்போக உணவு உற்பத்தி முன்மாதிரி விவசாயத்திட்டம் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை (04) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கிராமங்கள் தோறும் விவசாய உற்பத்தி மையங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரான்டிக்ஸ் நிறுவனத்தின் முழு அனுசரனையுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட மதுராபுரம் கிராமத்தில் ஆலயத்திற்கு சொந்தமான காணியொன்றில் ''ஒன்றிணைவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்'' எனும் தொனிப்பொருளில் பசுமைப்பயணம் பெரும்போக உணவு உற்பத்தி முன்மாதிரி விவசாயத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பங்கேற்று சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் கரிகரண், பிரான்டிக்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விவசாயிகள் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது விவசாயத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் விவசாயிகளுக்கான விதைப் பருப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment