நெடியமடுவில் ஆஞ்சநேயர் சுவாமிக்கும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணியருக்கும் மகாகும்பாபிஷேகம்.
மட்டக்களப்பு நகரின் மேற்கே மண்முனை மேற்கு பிரதேசத்தின் நெடியமடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமையப்பெற்ற பரிபால மூர்த்திகளான ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணியருக்கும் ஆவர்த்தன மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் ஞாயிற்றுக்கிழமை (21) மிக சிறப்பாக இடம் பெற்றது.
எம்கடமை அமைப்பின் தலைவர் பரமேஸ் கவி பரமேஸ்வரனால் தர்மலிங்கம் சுபாஸ்கரன் ராஜு (சுவிஸ்) குடும்பத்திரிடமும் குணரெத்தினம் தயாழினி (சுவிஸ்) ஆகியோரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இவ் இரு ஆலயங்களும் நிர்மானிக்கப்பட்டது.
சிவாச்சாரியார் சிவஸ்ரீ சபாபதி சிவாதான் குருக்கள் தலைமையில் யாகம் பூசைகள், கிரியைகள் நடைபெற்று வினாயகர் பூசையினைத் தொடர்ந்து ஆலய மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
0 Comments:
Post a Comment