22 Aug 2022

உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் மரக்கன்றுகள் மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகம்.

SHARE

உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் மரக்கன்றுகள் மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகம்.

எதிர்வு கூறப்படும் உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு மரக்கறிப் பயிர் நாற்றுக்களும் பழ மரக்கன்றுகளும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள கலையாற்றல் மிக்க பல்துறைக் கலைஞர்களுக்கு கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுக்களை வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகரில் திங்கள்கிழமை 22.08.2022 இடம்பெற்றது.

அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன்,  போதியளவு நிலப்பரப்புக் குறைவாக இருக்கின்ற இடங்களிலும் கூட பயிர்களை நாட்டி நாளாந்த வீட்டுக்குத் தேவையான மரக்கறிகளை இலைக்கறிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் நமக்குத் தேவையான போஷணையும் பெற்றுக் கொண்டு நோய் நொடியற்று ஆரோக்கியமாக வாழ முடியும். பயிர்களுக்குத் தேவையான இயற்கைப் பசளைகளையும் நாமே வீட்டில் நாளாந்தம் சேரும் கழிவுகளைக் கொண்டு தயாரித்துக் கொள்ள முடியும்.

நகர பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தை சிறப்பாகச் செய்து அறுவடையை நிரூபித்தக் காட்டி வெற்றியடைந்த விவசாயிகளும் ஏறாவூர் நகர பிரதேசத்தில் உள்ளார்கள்.

எனவே இத்தகைய முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்களும் உணவு உற்பத்திக்காக நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய வேண்டும்;” என்றார்.

இந்நிகழ்வில் மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபீப் முஹம்மது பாத்திமா சர்மிலா உட்பட விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களும்; பயனாளிகளும் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: