கடல் மீன் விலை உயர்வு மட்டு.மாவட்டத்தில் நன்னீர் மீன்களுக்கு கிறாக்கி அதிகரிப்பு.
இன்றைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மீன்களின் விலைகள் பெருமளவு உயர்வடைந்துள்ளதையடுத்து நன்னீர் மீன்களுக்கு பாரிய கிறாக்கி ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் அம்மீன்களையே அதிகம் கொள்வனவும் செய்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவியில் நன்னீர் மீன்கள் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. சுமார் 15000 குடும்பங்கள் வாவி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வாவி மீன்களில் செல்வன், கோள்டன், சள்ளல் கெழுத்தி மணலை கொய் கிளக்கன் அதக்கை உட்பட பல வகையான நன்னீர் மன்களை மக்கள் விரும்பி உணவாக உட்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
தினமும் காலை நேரத்தில் குறித்த நன்னீர் மீன்களை கொள்வனவு செய்ய அதிகப்படியான மக்கள் வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment