கருமாரி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் தீ மிதிப்பு கன்னிமார் பள்ளய வைபவத்துடன் நிறைவு.
மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 29.07.2022 அன்று மடையெடுப்பு வைபத்துடன் ஆரம்பமாகி ஞாயிறன்று 08.07.2022 தீ மிதிப்பு கன்னிமார் பள்ளய வைபவத்துடன் நிறைவு பெற்றது.
திருக்கதவு திறத்தல், வீரகம்பம் எடுத்து வருதல் உள் வெளி வீதி உலா வருதல், அரும்பு படைக்கும் நிகழ்வுகள், வினாயகப்பானை எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்வுகளோடு இறுதியாக தீ மிதிப்பு கன்னிமார் பள்ளயத்துடன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகளில் உள்ளுர் வெளியூர்களில் இருந்து வந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்வாக ஆலயத்தில் அன்னதானம் இடம்பெற்றது. கொடையாளி நவரெத்தினராசா சுபாசங்கர் இந்த அன்னதானத்திற்கு நிதி அனுசரணை வழங்கியிருந்ததாக ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment