யானைகட்டியவெளியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி.
வெல்லாவெளி பொலிஸ் பரிவிற்குட்பட்ட யானைகட்டியவெளி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(19) குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அண்மைய நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலினால் பல மனித உயிர்கள் இழந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment