13 Aug 2022

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையை பாராட்டி கல்குடா மீடியா போரத்தினால் கெளரவம்!!

SHARE

(சுதா)

மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விசேட வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில்

மிக சிறப்பாக  இடம்பெற்றிருந்தது.

இதன் போது  அரசாங்க அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான மற்றும் மக்கள் நல அபிவிருத்தி பணி நடவடிக்கை குறிந்து நினைவுகூரப்பட்டதுடன், சிநேக பூர்வ மிக்க உயர்தரமான அரச சேவையினை இலகுவாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் வகையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும், மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கல்குடா மீடியா போரத்தினால் அதன் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களினால் மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: