மட்டக்களப்பு Ioc யில் அரசாங்கத்தின் குடும்ப அட்டைக்கு பெற்றோல் வினியோகம்.
மட்டக்களப்பு Ioc யில் அரசாங்கத்தின் குடும்ப அட்டைக்கு பெற்றோல் வினியோகம்-ஒரேநாளில்800 மோட்டார் சைக்கிள்கள்களுக்கு பெற்றோல்
மட்டக்களப்பு நகர் Ioc எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலங்களினால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு பெற்றோல் வழங்கப்பட்டது. முழுநாளும் 800 மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டன.நிலையத்தின் அதிபர் தேசபந்து எம்.செல்வராசாவின் வழிகாட்டலில் சிரமமின்றி பெற்றோல் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
பிரதேச செயலகங்களினால் வினியோகிக்கப்பட்டிருந்த குடும்ப அட்டைகள் பிரதேச செயலக அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமை குறிப்படத்தக்கது. பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment